Thursday, February 17, 2011

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தேவை!!

வணக்கம் நண்பர்களே!!

எங்கள் விசுவல் மீடியா இணையத்தள குழுமங்கள் மூலம்  நேரடி ஒலி மற்றும் ஒளிபரப்பு ஆகிய சேவைகளை அதிநவீன நுட்பமான , க்ளவுட் கம்ப்யூட்டிங், முறையில் தரவிருக்கிறோம்.

எனவே அதன் சோதனை ஓட்டத்திற்காக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடும் போட்டீகளை 
நேரடி ஒலி வழியாக வர்ணனை செய்ய விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இது உங்களுக்கும் ஒரு வாய்ப்பு. தொழில்நுட்பத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு

வாருங்கள் எங்களுடன் இணையுங்கள்....சேர்ந்தே வளருவோம்....

Tuesday, January 25, 2011

நானும் வங்கி லோனும்.....

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு லோன் தருவாக சொல்ல அட நாமும் கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கிறோம் என்று லோனுக்கு அப்ளை செய்தேன்.
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு திடீரென்று ஒரு நாள் முன்னதாக அழைத்து வங்கி லோனுக்கு நேர் முகத்தேர்வு நடப்பதாக சொன்னார்கள். அட அந்நேரம் பார்த்து நான் சென்னை மாநகருக்கு சுற்றுப்பயணம்? போயிருந்தேன். அட நம்மையும் மதிச்சு கூப்பிடறாங்கன்னா நல்லவங்களாத்தான் இருப்பாங்க நம்பி சென்னையில் இருந்து அவசர அவசரமாக ஊர் வந்து சேர்ந்து உடனே கிருஷ்ணகிரி புறப்பட்டேன்.

காலையில் 11 மணிக்கு மாவட்ட தொழில் மையத்திற்கும் சென்று சேர்ந்தேன்.அங்கே போனால் வழி நெடுகிலும் கூட்டம். சரி  நம்ம ஊரில் இதெல்லாம் சகஜம்னு உள்ளே போய் எனக்கு வந்த கடிதத்தை அவர்களிடம் கொடுக்க வெளியில் காத்திருக்க சொன்னார்கள். சரி எப்படியும் சீக்கிரம் கூப்பிடுவாங்கன்னு உட்கார்ந்து உட்கார்ந்து சலிச்சு போச்சு... இதோ இப்போ வந்திரும் , இதோ இப்ப வந்திரும்னு உட்கார்ந்த என்னை சரியா கூப்பிட்டாங்க..... சாயந்திரம் 5.45 மணிக்கு.

சரி அப்படியாவது கூப்பிட்டாங்களேன்ன உள்ளேபோனா என்னப்பா தொழில் செய்யப்போறிங்கன்ன கேட்டாங்க....

நானும் க்ளவுட் கம்ப்யூட்டிங் அப்படிங்கிற நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் பல விதை மென்பொருள் உருவாக்கித்தர்றேன். வெப்சைட் எல்லாம் டிசைன் பண்ணித்தர்றேன் , விரைவில் GPs Tracking System எல்லாம் எங்கள் சர்வரைத்தான் பயன்படுத்தப்போறாங்க. அதற்குமுதலீடாக சில லட்சம் தேவைப்படுத்துன்னு சொன்னேன்.

அத கேட்ட தொழில்மைய மேலாளர் கேட்டார், க்ளவுட் கம்ப்யூட்டிங் னா என்னாப்பான்னார்... நானும் விலாவரிய விளக்கிச்சொன்னேன்.

சரிப்பா நீ  சொல்ற எந்த விசயமும் நம்ம ஊர்ல சக்சஸ் ஆகாதேன்னார். அதுக்கு நான் சொன்னன் சக்சஸ் ஆகறதும், ஆகாததும் நம்மாட்கள் பயன்படுத்தற விதத்திலும் , சந்தை படுத்தற விதத்தில் சந்தை படுத்தினா எல்லாமே சக்சஸ்தான்னு சொன்னேன்.

அத கேட்ட அவரு என்ன நினைச்சாருன்னு தெரிய,,,
இந்த தொழிலுக்கெல்லாம் லோன் தர முடியாதுன்னார். ஏன் சார்னு கேட்டா..  நீ புதுசா சந்தை படுத்தினா எப்படி சக்சஸ் பண்ண முடியும். சந்தை படுத்தறதுக்கெல்லாம் லோன் தர முடியாதுன்னுட்டார்.

நான் எப்ப சந்தை படுத்த காசு வேணும்னு  கேட்டேன் னு எனக்கு தெரியல...

உடனே பக்கத்தில் இருந்த இன்னொரு பேங்க் மேனேஜர் கொட்டேசன் காட்டுப்பான்னாரு...

நானும் சரின்னு கொடுத்தேன்.....
கொடுத்தவுடனே என்னப்பா இது டாலர்ல இருக்குன்னார். நான் சொன்னேன். சர்வர் எல்லாம் அமெரிக்காவில் தான் வாங்கணும்னு.

அவருக்கு என்ன தோணுச்சோ தெரியல தம்பி, அடுத்த மாவட்டத்தில் போய் ஆரம்பிக்கிறேன்னு சொன்னாலயே லோன் தரமாட்டோம். நீ என்னன்னா அடுத்த நாட்டில் போய் ஆரம்பிக்கிறேன்னு சொல்லறியே.... கண்டிப்பா இதுக்கெல்லாம் தர முடியாதுன்னுட்டார்..... ஏன்னா எல்லா பொருளும் அவங்க கண்ணு முன்னாடியே இருக்கணுமாம்.
அதனால அந்த சர்வர இங்கிட்டு இருந்து ரன் பண்ணுன்னார்.....
அது வேலைக்காகாதே........ நம்ம ஊர்ல அந்த அளவிற்கு நுட்பம் இன்னமும் முழுமையா வளரலைன்னு சொன்னேன்.....
யாரும் ஒத்துக்கவேயில்லை......

கடைசியா சொன்னாங்க... இன்னைக்கு லோன் கேட்க வந்தவெங்க எல்லாம் மாடு வாங்கணும், ட்ராக்டர் வாங்கணும்னுதான் சொன்னாங்க. நீ ஏதோ புதுசா சொல்ற... ஆனா வெளிநாட்டுல செய்ய வியாபாரத்துக்கெல்லாம் இங்கிட்டு லோன் தரமுடியாதுன்னு....

அப்பவே எனக்க கண்ண கட்டிபோச்சு.... ஏன்னா உள்ள போனதுல இருந்து ஒரே வார்த்தையே திரும்பி திரும்பி சொல்றங்கன்ன புரிஞ்சு போச்சு....
கடைசியா வெளியே வந்தாச்சு....

ஒரு நாள் அலுவல வேலை முடிஞ்சே போச்சு....

6ம் வகுப்பு படிச்சப்ப எங்க வாத்தியார் சொன்னாரு.... நீயெல்லாம் நண்டு புடிக்கத்தான் லாக்கின்னு.....

பேசாம அந்த தொழிலயே செய்யலாம்னு இருக்கேன்......

இதோ நண்டுபிடிக்க பயிற்சி எடுக்கும்....



Tuesday, November 23, 2010

இணையவழி இலவச சட்ட ஆலோசனை

வணக்கம் நண்பர்களே!

நான்காம் உலகம் என்ற இலக்கை நோக்கி எங்களது விசுவல் மீடியா நிறுவனம் பயணித்துவருகிறது. நான்காம் உலகம் விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்ற மூன்று உலகங்களை தாண்டி இணையம் வழியாக ஒரு உலகம் முழுவதும் தமிழுக்காக உருவாக்கவேண்டும் என்பதன் அதனடிப்படையில் தமிழில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு துறை சார்ந்த தளங்களை துவக்கி அதன் வழியாக அந்த துறையின் சார்பாக எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் இடம்பெறச் செய்து யாவருக்கும் பயனளிக்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

அதனடிப்படையில் ஏற்கனவே http://www.தமிழ்வணிகம்.com கடந்த இரண்டு வருடமாக பயணித்து வருகிறது.
தற்போது இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க தற்போது மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு சட்டஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக்கியிருக்கிறோம்.
இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.
எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்களையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.


இணைந்து பயன்பெறுங்கள்
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
-- 

Monday, November 22, 2010

பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் அவல நிலை!!

வரலாற்றின் எச்சம் என்றைழக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னொரு அதிசயம் தயிர் எல்லாம் வெண்ணெய் ஆகும் அதிசயம்.

இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை பற்றி பார்ப்பதற்கு முன்பு கிருஷ்ணகிரியின் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை தெரிந்துகொள்ளலாமா?

தமிழகத்திலியே முதன் முதலாக வரலாற்றுக்கு முந்தைய காலப் பாறைகள் ஓவியங்கள் இங்குத்தான் அதிகமாக காணப்படுகின்றன. இவ்ஓவியங்களின் வயது சுமார் 2500 வருடங்கள் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லப்பாடி எனும் இடத்தில் அமைந்துள்ள கற்பாறையில் வீரன் ஒருவன் குதிரமை ஈமது சென்றவாறு ஈட்டி எறிலைக் காட்டுகிறது. இதுபோன்ற பல ஓவியங்களை நாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணலாம் எனும்போதுகிருஷ்ணகிரி மாவட்டத்தினை பழஞ்சிறப்புகளை வெகு எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் இங்கு கிடைத்துள்ள கற்காலக்கருவிகளை வைத்து வெளிநாட்டு நிலவியல் ஆராய்ச்சி அறிஞர் திரு.ராபர்ஸ் புரூஸ்புட் எனும் அறிஞர்கள் இக்கருவிகள் கி.மு. 3500 ஆண்டுக் கட்டத்தை சேர்ந்தவை என்று கூறுகிறார்.
கிருஷ்ணகிரி அருகேஉள்ள தொகரப்பள்ளி, பருகூர், மயிலாடும்பாறை எனசுற்றியுள்ளப் பகுதிகளில் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கிருஷ்ணதேவராயரின் சிற்றப்பா மகனான ஜெகதேவி ராயர் ஆண்ட பகுதியும் கிருஷ்ணகிரி -பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க இடம் பெற்றிருந்தாலும்இன்னொரு செய்தியும் வரலாற்றில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

தயிரெல்லாம் தானாகவே வெண்ணைய் ஆகும் புண்ணிய பூமி இது. அட உண்மையான உண்மை.
எப்படியெனில் பெங்களூர் - பாண்டி நெடுஞ்சாலையில் உள்ள குண்டும் குழியுமான ரோடுகளில் தயிரை எடுத்துச் சென்றால் வெண்ணெய் தானாகவே வந்துவிடுகிறது. கடய வேண்டிய அவசியமில்லை.

அந்த அளவிற்கு இன்றைய கிருஷ்ணகிரி அரசியல்வாதிகளால் சரிவர கவனிக்கப் படுவதில்லை என்பது வருத்தமான சேதியாக இருக்கிறது.

கிருஷ்ணகிரியும், தர்மபுரியும் வறட்சி மாவட்டமாக அறிவித்தக்காலங்களும் உண்டு. ஆனால் என்னற்ற இயற்கை வளங்களை இன்றும் உள்ளடக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் கல் குன்றுகளை இன்று கிரானைட் கற்கள் என்ற பெயரில் வெட்டி எடுத்து மலைகளையே பெயர்த்து எடுத்துவருகின்றனர் இப்போது.

இவையெல்லாம் ஒரு பக்கமாக இருந்தாலும் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூர் - சேலம் நெடுஞ்சாலை, பெங்களூர் - சென்னை நெஞ்சாலைகள் சிறப்பாக இருந்தாலும் பெங்களூர் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன.

தீபாவளிக்கு முன்பு வரை 8 பேர் ரோடுகளில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் இறந்துள்ளனர்.

மேலும் தரமாற்ற ரோடுகளால் ஏற்படும் புழுதிகள் வாகன ஒட்டிகளின் கண்களிலும் மற்றவற்றிலும் பட்டு மிகப்பெரிய அசெவுகரியத்தை ஏற்படுத்திவருகின்றன.

ஏன் நானே கண்ணில் படிந்த தூசியை சும்மா துடைத்துவிட்டு பார்த்தபோது எதிரில் வந்த பஸ்சிடம் இருந்து ஓரங்கட்ட முயன்று ஒரு கரண்ட் கம்பத்தினில் மேல் வண்டியை விட்டேன். அந்த அளவிற்கு அபாயகரமான சாலையாக இருக்கிறது பாண்டிச்சேரி - பெங்களூர் நெடுஞ்சாலை. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை தரமான சாலைகள் இருந்தாலும் கிருஷ்ணகிரியில் இருந்து ஆரம்பிக்கிறது மிகப்பெரிய சிக்கல்.

சபரிமலை பகுதியில் மலையேறும் மக்கள் சொல்லும் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தையே இங்கு வெகு எளிதாக பயன்படுத்தலாம். குண்டும் குழியும் உடம்புக்க சுளுக்கு என்று பாடலாம். அந்தஅளவிற்கு மிக மிக மோசமான ஒரு சாலையாக இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் மழைக்காலத்தில் இன்னமும் மோசமாகிவிடுகிறது. ஆங்காங்க தண்ணீர் தேங்கி மினி ஆறுகளாகிவிடுகின்றன.

ஒரு நாளைக்கு 4 கொசுக்கு மேல் கடித்தால் உடனே கொசு அதிகமாகிவிட்டது என்று போராட்டம் செய்யும் ஜெயலலிதாவின் அ.தி.மு.கவினர்களுக்கும் இது தெரியவில்லையா?

அல்லது

ஆளுங்கட்சியாக இருந்துகொண்டிருக்கும் திமுகவினருக்கு செய்தவரை போதும் என்று அலுப்பு
தட்டிவிட்டதா என்று தெரியவில்லை.

ஆனால் பாதிப்பு வழக்கம்போல் கடைக்கொடி மக்களுக்கே!

சமீபகாலமாக இந்த ரோட்டில் பயணம் செய்பவர்கள் கண் டாக்டர்களிடம் செல்வதும் அதிகரித்துள்ளது. அந்த அளவிற்கு அங்கே புழுதியும் கிளம்புவதாக பயணிகள் கூறியுள்ளனர்.

இதோ பாவப்பட்டவர்கள் பயணிக்கும் சாலை
road3

20101121_002.jpg road1

road

road9

Tuesday, January 26, 2010

பதில் சொல்வது யார்?

பதில் அளிப்பது யார்?


1957ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்குள் முதல் வருகை பதித்த முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தனது பொன்விழாவை கொண்டாடும் சமயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினை கட்டிக்காப்பாற்றிவரும் திமுக தலைவருக்கு அடுத்தபடியாக திமுகவிற்க்கான தலைமையை கலைஞருக்கு அடுத்து யார் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தாலும் தினகரன் நாளிதழ் உலகப் புகழ்பெற்ற ஏ.சி.நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து மக்கள் மனசு என்ற பெயரில் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது.

இக்கருத்துகணிப்பில் நேற்று(09/05/07) கலைஞரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கருத்துக்கணிப்பின் முடிவை வெளியிட்டுள்ளது.

இக்கருத்துகணிப்பில் தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் அரசியல் வாரிசாக ஸ்டாலின் வர விருப்பம் தெரிவித்து 70%மும, அழகிரிக்கு தென் தமிழகத்தில் தவிர மற்றவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் நடத்திய வெறியாட்டத்தில் மக்கள் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல் தினகரன் அலுவலகத்தில் நடத்திய கோர வெறி தாக்குதலில் தினகரன் அலுவலக தொழில்நுட்ப ஊழியர்கள் இருவரும், பாதுகாப்பாளர் ஒருவரும் பலியாகிஉள்ளனர்.



* திமுக தலைவர் வீட்டில் நடைபெறும் குடுமிபுடி சண்டைக்கு அப்பாவி ஊழியர்கள் பலிவாங்கப்பட்டது சரிதானா ?



* தமிழகத்தில் வன்முறையே இல்லை என்று எதிர்கட்சிக்களுக்கு சூடு கொடுத்துவரும் தமிழக முதல்வரின் மகனும், அவர்களின் ஆதரவாளர்களும் நடத்திய வன்முறைக்கு இவர்களுக்கு சம்மந்தமே இல்லாத மூவர் பலியானது சரிதானா?



* கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்களுக்கு அமைதியான முறையில் தீர்வை காணாமல் அராஜகமான முறையில் தன் எதிர்ப்பை தெரிவித்த அழகிரி அதேபோன்ற கருத்துக்கணிப்பில் தன்னுடைய பெயரும் இடம்பெற இன்னும் பாடுபடுவதை விட்டுவிட்டு வன்முறையில் இறங்குவது சரிதானா?



* தன்னுடைய 25ம் வயது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த நாளே வன்முறையாளர்களின் கோரபசிக்கு பலியான கோபிநாத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னால் மட்டும் போதுமா? அதே போல்

அந்த நிறுவனத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பாதுகாப்பு?



* குடும்ப பிரச்னைக்கு அரசியல் ஆக்கியுள்ள இவர்களுக்கு மீண்டும் அரசியல் நடத்த தகுதியுள்ளவர்களா?



* இப்படி பத்திரிக்கை கருத்துக்கணிப்பில் வெளியிட்டதற்காக மூன்று நபர்கள் பலி என்றால் பிற்காலங்களில் கருத்துக்கணிப்பே வெளியிடாத நிலை ஏற்படுமா?



* திமுக வின் ஆட்சியில் திமுகவினராலேயே திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்களின் நிறுவனத்திலே கருணாநிதியின் சொந்த மகனே கோரவன்முறையில் இறங்கியதற்கு கருணாநிதி சொல்லும் பதில் என்ன?



* தாக்குதல் நடத்தப்பட்ட போது கைகட்டி வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த போலீசார்களுக்கும் நாளை இதே சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?



* எத்தனையோ வண்ணக் கனவுகளுடன் வேலைக்கு சேர்ந்த ஊழியர்களின் கனவுகள் அவர்களோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகியதற்கு யார் பதில் கூறுவர்?



* அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது கோவை வேளாண்மைக்கல்லூரி மாணவிகள் மூவரை அதிமுகவினர் எரித்தனர். இன்று மூன்று ஊழியர்களை திமுகவினர் எரித்துள்ளனர். இவர்களின் அராஜகர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?



* அராஜகமும் வெட்டும் குத்தும்தான் அரசியல் என்றால் ஜனநாயகம் என்பதற்கு பொருள் என்ன?



இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னாலும் மூவரும் உயிரோடு வரப்போவதில்லை. ஆனால் இருக்கின்ற உயிர்கள் காப்பாற்றபடலாமே ?



எது எப்படியாயினும் இறந்த எங்கள் தோழனுக்கு எங்களின் கண்ணீரை காணிக்கையாக்கி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

Thursday, January 21, 2010

சிக்கலில் ஐபி4 முகவரி .......

பெருகிவரும் இணைய பயன்பாட்டில் 10% குறைவான முகவரியே கையிருப்பு.

முதலில் ஐபி4 பற்றி தெரியாதவர்களுக்கு : பிணையத்திலும், இணையத்திலும் பயன்படுத்தும் கணினிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் முகவரியாக ஒரு எண்ணைஐ கொடுப்பார்கள். அந்த எண்ணின் வடிவம்தான் ஐபி4.

உலகளாவிய அளவில் இணையம் இயங்குவதற்கு முக்கிய காரணமே இந்த ஐபி முகவரிகளாகிய எண்கள்தான். அப்படியா என்று கேட்பதற்கு முன்னர் ஒரு சிறு விளக்கம் . நம்மில் இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் டிஎன்எஸ் என்பது பற்றி தெரியும்.

Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இணையத்திலோ அல்லது பிணையத்திலோ பங்கேற்கும் உறுப்புக்கள்(கணினி, அச்சு பொறி, மொபைல், பிடிஏ) என ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐபி முகவரி ஒதுக்கப்படும்.


குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 174.37.210.240 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.

இதில் 174.37.210.240 என்கிற இந்த எண் ஐபி4 முறைப்படி அமைந்திருக்கிறது.
ஆம் இதில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் 32 பிட் அல்லது 4பைட் அளவில் அமைந்திருக்கும்.
இப்படி 0.0.0.0 முதல் 255.255.255.255 வரை முகவரிகளை நாம் வழங்கலாம். இப்படி ஒவ்வொரு கணினிக்கும், அச்சுப்பொறிகளுக்கும், அலைபேசிகளுக்கும் வழங்கினாலும் மொத்தமாக 4,294,967,296,( நானுற்றி 29 கோடியே49 லட்சத்து அறுபத்திஎழு ஆயிரத்து இருநூற்றி தொண்ணுத்தாறு) முகவரிகள்தான் வழங்கமுடியும்.
தற்போது இணையம் சார்ந்த பணிகள் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளுக்கும் ஐபி முகவரி என்பது இன்றியைமயாததாகிறது. தற்போது பெரிய பெரிய அலுவலகங்களில் நிறுவனங்களை மேலாண்மையிட ஐபி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றனது. இப்படி ஒவ்வொரு கேமராக்களிலும் ஐபி முகவரிகள் வழியாக இயங்குவதால் ஐபி முகவரிகள் விரைவாக செலவாகிவிட்டது.
அதிலும் குறிப்பாக இன்னொன்று...

தற்போது அகண்ட அலைவரிசை எனப்படும்ப்ராட்பேண்ட் வழியாக இணையத்தை தொடர்புகொள்வோர்கள் மிக அதிகம். அதனாலும் ஐபி முகவரிகள் குறைந்துவருகின்றன. ப்ராட்பேண்ட் இணையத்தை பயன்படுத்துபவதால் எப்படி ஐபிமுகவரிகள் குறையும் என்று கேட்கலாம்.
ஒவ்வொரு முறையும் கணினி இணையத்தை தொடர்புகொண்டவுடன் அவர்களுக்கான இணைய வழங்கியானது தானாகவே ஒரு ஐபி முகவரியை வழங்கும். இப்போது அகண்ட அலைவரிசையானது குறைந்தவிலையில் கிடைப்பதால் யாரும் இணையத்தை விட்டு அகலுவதேஇல்லை .இதனால் ஒரே கணினி ஒரே முகவரியை பெற்றுவிடுகிறது.
மேலும் வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணைய இணையப்பிற்கும் ஒரு நிலையான ஐபி முகவரி வழங்கிவிடுகிறார்கள். இப்படி பல்வேறு காரணங்களால் இதுவரை வந்த ஐபி4 இன்னமும் 10% குறைவான அளவுதான் இருக்கிறது.

தீர்வு.

1996ம் ஆண்டிலேயே ஆண்டிலிருந்து ஐபி 6 முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின் இதற்கு முன்னமே கணினி ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்து நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபி முகவரிகளை வடிவமைத்துவருகின்றன.
அதுதுான் ஐபி6 முகவரி. இந்த முகவரி 128 பிட் அளவில் வரும் என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். அதோடு ஐபி செக்யூர் எனப்படும் பாதுகாப்பு முறைகளும் மேம்படுத்தப்படும்
தற்போது கூகிள் நிறுவனமும், இந்தியாவில் ஃசிபி நிறுவனமும் ஐபி6 முறைக்கு மாறிவருகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது.
எனவே இந்த வருடம் தொட்டே அனைத்து நிறுவனங்களும் ஐபி6 முறைக்கு மாறும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொசுறு : ஐபி4 முறை செப்டம்பர் , 1981ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐபி6 1990ம் ஆண்டில் வெளியிட்டபட்டு வந்தாலும் இன்னமும் இவற்றை முழுமையாக பயன்படுத்தவில்லை.

*. கூகிள் நிறுவனம் 2009ம் ஆண்டு இறுதி வரை தன்னுடைய மொத்த நெட்வொர்க்கில் 28% சதவிதத்தை மட்டுமே ஐபி6 நெட்வொர்க்கிற்கு மாற்றியிருக்கிறது

* 2011 ம் ஆண்டில் ஐபி4 முகவரிகள் முழுவதும் தீர்ந்து ஐபி6 முகவரிகளுக்கு மாற்றும் என்று கணித்துள்ளனர்.

Sunday, November 15, 2009

தமிழ் இணைய பயிலரங்கு

வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அடிப்படை வசதிகளில், ஒரு அலைபேசியும் அதில் இணைய இணைப்பும் வரும் காலங்களில் கட்டாயமானதாகிவிடும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால் இன்னொரு புறம் பள்ளிகளிலும், கல்வி நிலையங்களிலும் இன்னமும் அவை வெறும் ஏடுகளில் மட்டுமே படிக்கும் வண்ணம் இருந்து வருகிறது. மேலும் அவர்கள் படிக்கும்போது ஒரு மென்பொருளும், படித்துமுடித்தபின் பயன்படுத்தும் மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருந்துவருகின்றனது . ஆகையால் அவர்களும் அவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்களும் அடிக்கடி தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவேண்டியது கட்டாயம்.
இந்த நிலை மாற எங்களது விஷூவல் மீடியா நிறுவனம் பள்ளிகள் மறறும் கல்வி நிலையங்களுக்குச் சென்று மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்களை இலவச கருத்தரங்குகள் , இணைய வழி ஆலோசனைகள் வழியே எடுத்துரைக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதன் வழியாக அனைவரும் புதிய தொழில்நுட்பங்களை வெகு எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
எங்களின் இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம்.