Monday, November 22, 2010

பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் அவல நிலை!!

வரலாற்றின் எச்சம் என்றைழக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னொரு அதிசயம் தயிர் எல்லாம் வெண்ணெய் ஆகும் அதிசயம்.

இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை பற்றி பார்ப்பதற்கு முன்பு கிருஷ்ணகிரியின் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை தெரிந்துகொள்ளலாமா?

தமிழகத்திலியே முதன் முதலாக வரலாற்றுக்கு முந்தைய காலப் பாறைகள் ஓவியங்கள் இங்குத்தான் அதிகமாக காணப்படுகின்றன. இவ்ஓவியங்களின் வயது சுமார் 2500 வருடங்கள் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லப்பாடி எனும் இடத்தில் அமைந்துள்ள கற்பாறையில் வீரன் ஒருவன் குதிரமை ஈமது சென்றவாறு ஈட்டி எறிலைக் காட்டுகிறது. இதுபோன்ற பல ஓவியங்களை நாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணலாம் எனும்போதுகிருஷ்ணகிரி மாவட்டத்தினை பழஞ்சிறப்புகளை வெகு எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் இங்கு கிடைத்துள்ள கற்காலக்கருவிகளை வைத்து வெளிநாட்டு நிலவியல் ஆராய்ச்சி அறிஞர் திரு.ராபர்ஸ் புரூஸ்புட் எனும் அறிஞர்கள் இக்கருவிகள் கி.மு. 3500 ஆண்டுக் கட்டத்தை சேர்ந்தவை என்று கூறுகிறார்.
கிருஷ்ணகிரி அருகேஉள்ள தொகரப்பள்ளி, பருகூர், மயிலாடும்பாறை எனசுற்றியுள்ளப் பகுதிகளில் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கிருஷ்ணதேவராயரின் சிற்றப்பா மகனான ஜெகதேவி ராயர் ஆண்ட பகுதியும் கிருஷ்ணகிரி -பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க இடம் பெற்றிருந்தாலும்இன்னொரு செய்தியும் வரலாற்றில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

தயிரெல்லாம் தானாகவே வெண்ணைய் ஆகும் புண்ணிய பூமி இது. அட உண்மையான உண்மை.
எப்படியெனில் பெங்களூர் - பாண்டி நெடுஞ்சாலையில் உள்ள குண்டும் குழியுமான ரோடுகளில் தயிரை எடுத்துச் சென்றால் வெண்ணெய் தானாகவே வந்துவிடுகிறது. கடய வேண்டிய அவசியமில்லை.

அந்த அளவிற்கு இன்றைய கிருஷ்ணகிரி அரசியல்வாதிகளால் சரிவர கவனிக்கப் படுவதில்லை என்பது வருத்தமான சேதியாக இருக்கிறது.

கிருஷ்ணகிரியும், தர்மபுரியும் வறட்சி மாவட்டமாக அறிவித்தக்காலங்களும் உண்டு. ஆனால் என்னற்ற இயற்கை வளங்களை இன்றும் உள்ளடக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் கல் குன்றுகளை இன்று கிரானைட் கற்கள் என்ற பெயரில் வெட்டி எடுத்து மலைகளையே பெயர்த்து எடுத்துவருகின்றனர் இப்போது.

இவையெல்லாம் ஒரு பக்கமாக இருந்தாலும் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூர் - சேலம் நெடுஞ்சாலை, பெங்களூர் - சென்னை நெஞ்சாலைகள் சிறப்பாக இருந்தாலும் பெங்களூர் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன.

தீபாவளிக்கு முன்பு வரை 8 பேர் ரோடுகளில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் இறந்துள்ளனர்.

மேலும் தரமாற்ற ரோடுகளால் ஏற்படும் புழுதிகள் வாகன ஒட்டிகளின் கண்களிலும் மற்றவற்றிலும் பட்டு மிகப்பெரிய அசெவுகரியத்தை ஏற்படுத்திவருகின்றன.

ஏன் நானே கண்ணில் படிந்த தூசியை சும்மா துடைத்துவிட்டு பார்த்தபோது எதிரில் வந்த பஸ்சிடம் இருந்து ஓரங்கட்ட முயன்று ஒரு கரண்ட் கம்பத்தினில் மேல் வண்டியை விட்டேன். அந்த அளவிற்கு அபாயகரமான சாலையாக இருக்கிறது பாண்டிச்சேரி - பெங்களூர் நெடுஞ்சாலை. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை தரமான சாலைகள் இருந்தாலும் கிருஷ்ணகிரியில் இருந்து ஆரம்பிக்கிறது மிகப்பெரிய சிக்கல்.

சபரிமலை பகுதியில் மலையேறும் மக்கள் சொல்லும் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தையே இங்கு வெகு எளிதாக பயன்படுத்தலாம். குண்டும் குழியும் உடம்புக்க சுளுக்கு என்று பாடலாம். அந்தஅளவிற்கு மிக மிக மோசமான ஒரு சாலையாக இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் மழைக்காலத்தில் இன்னமும் மோசமாகிவிடுகிறது. ஆங்காங்க தண்ணீர் தேங்கி மினி ஆறுகளாகிவிடுகின்றன.

ஒரு நாளைக்கு 4 கொசுக்கு மேல் கடித்தால் உடனே கொசு அதிகமாகிவிட்டது என்று போராட்டம் செய்யும் ஜெயலலிதாவின் அ.தி.மு.கவினர்களுக்கும் இது தெரியவில்லையா?

அல்லது

ஆளுங்கட்சியாக இருந்துகொண்டிருக்கும் திமுகவினருக்கு செய்தவரை போதும் என்று அலுப்பு
தட்டிவிட்டதா என்று தெரியவில்லை.

ஆனால் பாதிப்பு வழக்கம்போல் கடைக்கொடி மக்களுக்கே!

சமீபகாலமாக இந்த ரோட்டில் பயணம் செய்பவர்கள் கண் டாக்டர்களிடம் செல்வதும் அதிகரித்துள்ளது. அந்த அளவிற்கு அங்கே புழுதியும் கிளம்புவதாக பயணிகள் கூறியுள்ளனர்.

இதோ பாவப்பட்டவர்கள் பயணிக்கும் சாலை
road3

20101121_002.jpg road1

road

road9

No comments: