Tuesday, December 13, 2011

இந்திய நாட்டில் நடந்துவரும் முக்கிய பிரச்னைக்கு காரணம். இலவசமே....

ஏனெனில் இலவசம் பெருக பெருக மத்திய மாநில அரசுகளுக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. நிதி பற்றாக்குறையால் விலை ஏற்றம் நடைபெறும். விலை ஏற்றத்தால் பண வீக்கம் அதிகரிக்கிறது. பணம் வீக்கம் அதிகரித்தால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் வௌஅிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணங்களை திரும்ப எடுக்க துவங்குவாங்கள். அப்படி தங்கள் முதலீடுகளை திரும்ப பெருவதால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்கின்றன. அப்படி அவைகள் வீழ்வதால் நிறுவனங்களின் மதிப்பும், உற்பத்தியும் குறையும், செலவு குறையும். இதனால் இன்னமும் அதிகமாக கடன் பெறுவார்கள். கடன் அதிகமாக லாபம் குறைவதால் யாரும் முதலீடு செய்யமாட்டார்கள். மேலும் வாங்கி கடனிற்காக சிறிதி விலை கூட்டினாலும் அவர்களின் சந்தைமதிப்பு குறையும். சந்தை மதிப்பு குறைந்தால்் உற்பத்தி பாதிக்கப்படும். உற்பத்தி பாதித்தால் வேலை இழப்பு ஏற்படும். வேலையே இல்லாமல் பணப்பரிமாற்றம் குறைவாகும்.
மீண்டும் பணப்பரிமாற்றத்தினை அதிகரிக்க அதிகமாகன கடன் வழங்குவார்கள்.


அமெரிக்காவிற்கு எதிராக மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் எதிரான பண மதிப்பு குறைந்துதான் காணப்படுகிறது. ஏனெனில் இந்திய தொழில்துறையின் வளர்ச்சி துவண்டு போய் உள்ளது. ஏனெனில் ஆட்சியாளர்கள் அந்நிய முதலீட்டை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்களே!!