Tuesday, January 26, 2010

பதில் சொல்வது யார்?

பதில் அளிப்பது யார்?


1957ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்குள் முதல் வருகை பதித்த முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தனது பொன்விழாவை கொண்டாடும் சமயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினை கட்டிக்காப்பாற்றிவரும் திமுக தலைவருக்கு அடுத்தபடியாக திமுகவிற்க்கான தலைமையை கலைஞருக்கு அடுத்து யார் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தாலும் தினகரன் நாளிதழ் உலகப் புகழ்பெற்ற ஏ.சி.நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து மக்கள் மனசு என்ற பெயரில் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது.

இக்கருத்துகணிப்பில் நேற்று(09/05/07) கலைஞரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கருத்துக்கணிப்பின் முடிவை வெளியிட்டுள்ளது.

இக்கருத்துகணிப்பில் தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் அரசியல் வாரிசாக ஸ்டாலின் வர விருப்பம் தெரிவித்து 70%மும, அழகிரிக்கு தென் தமிழகத்தில் தவிர மற்றவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் நடத்திய வெறியாட்டத்தில் மக்கள் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல் தினகரன் அலுவலகத்தில் நடத்திய கோர வெறி தாக்குதலில் தினகரன் அலுவலக தொழில்நுட்ப ஊழியர்கள் இருவரும், பாதுகாப்பாளர் ஒருவரும் பலியாகிஉள்ளனர்.



* திமுக தலைவர் வீட்டில் நடைபெறும் குடுமிபுடி சண்டைக்கு அப்பாவி ஊழியர்கள் பலிவாங்கப்பட்டது சரிதானா ?



* தமிழகத்தில் வன்முறையே இல்லை என்று எதிர்கட்சிக்களுக்கு சூடு கொடுத்துவரும் தமிழக முதல்வரின் மகனும், அவர்களின் ஆதரவாளர்களும் நடத்திய வன்முறைக்கு இவர்களுக்கு சம்மந்தமே இல்லாத மூவர் பலியானது சரிதானா?



* கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்களுக்கு அமைதியான முறையில் தீர்வை காணாமல் அராஜகமான முறையில் தன் எதிர்ப்பை தெரிவித்த அழகிரி அதேபோன்ற கருத்துக்கணிப்பில் தன்னுடைய பெயரும் இடம்பெற இன்னும் பாடுபடுவதை விட்டுவிட்டு வன்முறையில் இறங்குவது சரிதானா?



* தன்னுடைய 25ம் வயது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த நாளே வன்முறையாளர்களின் கோரபசிக்கு பலியான கோபிநாத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னால் மட்டும் போதுமா? அதே போல்

அந்த நிறுவனத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பாதுகாப்பு?



* குடும்ப பிரச்னைக்கு அரசியல் ஆக்கியுள்ள இவர்களுக்கு மீண்டும் அரசியல் நடத்த தகுதியுள்ளவர்களா?



* இப்படி பத்திரிக்கை கருத்துக்கணிப்பில் வெளியிட்டதற்காக மூன்று நபர்கள் பலி என்றால் பிற்காலங்களில் கருத்துக்கணிப்பே வெளியிடாத நிலை ஏற்படுமா?



* திமுக வின் ஆட்சியில் திமுகவினராலேயே திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்களின் நிறுவனத்திலே கருணாநிதியின் சொந்த மகனே கோரவன்முறையில் இறங்கியதற்கு கருணாநிதி சொல்லும் பதில் என்ன?



* தாக்குதல் நடத்தப்பட்ட போது கைகட்டி வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த போலீசார்களுக்கும் நாளை இதே சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?



* எத்தனையோ வண்ணக் கனவுகளுடன் வேலைக்கு சேர்ந்த ஊழியர்களின் கனவுகள் அவர்களோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகியதற்கு யார் பதில் கூறுவர்?



* அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது கோவை வேளாண்மைக்கல்லூரி மாணவிகள் மூவரை அதிமுகவினர் எரித்தனர். இன்று மூன்று ஊழியர்களை திமுகவினர் எரித்துள்ளனர். இவர்களின் அராஜகர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?



* அராஜகமும் வெட்டும் குத்தும்தான் அரசியல் என்றால் ஜனநாயகம் என்பதற்கு பொருள் என்ன?



இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னாலும் மூவரும் உயிரோடு வரப்போவதில்லை. ஆனால் இருக்கின்ற உயிர்கள் காப்பாற்றபடலாமே ?



எது எப்படியாயினும் இறந்த எங்கள் தோழனுக்கு எங்களின் கண்ணீரை காணிக்கையாக்கி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

No comments: