Tuesday, September 23, 2008

ஓட்டு போடறதுக்கு முந்தி யோசிங்க மக்கா!!

அட என்ன தலைப்பை பார்த்தவுடனே ஓடிவந்துட்டிங்களா?
5 வருஷத்துக்கு ஒரு தரம் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை முறை மாறும்னு பெரியவங்க சொன்னாங்க. அதுவும் உண்மைதானுங்க...

5 வருஷத்து ஒரு தடவை நம்மளை தேடி அவங்க வருவாங்க.

நாம் கால் மேல கால் போட்டுட்டு அவங்கட்ட பேசலாம்

அடுத்த 5 வருஷமும் அவங்கள தேடி நாம போனா
கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்து அவங்க பேசுவாங்க.

அட இதுவும் ஒரு வகையில் கல்யாணம் பண்ற மாதிரிதான். ஏன்னா கடைசி வரைக்கும் நம்மளோட வாழ்க்கை நடத்தற பொண்ணுன்னு நாம என்ன செய்வோம் நிறைய யோசிப்போம்? நம்ம எதிர்பார்ப்ப நிவர்த்தி செய்யறதா இருந்தா மட்டும்தான் நாம கல்யாணம் பண்ணுவோம்.

இந்த ஒட்டும் அப்படித்தானுங்க....

தனியாள் பலம் என்பது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பலம் என்பது இதுதான். 200 வருஷம் வெளளைக்காரங்ககிட்டத்தான் ஷூவை நக்கிட்டு இருந்தோம். இப்ப வர அரசியல்வாதிங்கட்டயும் அப்படித்தான் நாம அப்படித்தான் இருக்கணுமோன்னு யோசிக்க தோணுது.

அரசியல் வாதிங்க பண்ற அராஜாகம் அது இது நமக்கு தேவையில்லை என்றாலும் நம்ம தேவைகள நிறைவேத்தறாங்களா? ன்னு பார்க்கணும்.

இந்த முறை பார்த்திங்கன்னா தமிழ்நாட்டுல இருந்த தேர்வாயிருந்த பல எம்பிங்க பார்லிமெண்டில் ஒரு வினாடியும் பேசவே இல்லை. அடஎங்க தொகுதியில இந்த வாய்ப்பு இருக்கு, அங்க இந்த மாதிரி வளம் இருக்குன்னு இவங்க எடுத்துச் சொன்னாத்தான் நம்ம ஊரப்பத்தி நாலு பேருக்கும்தெரியும், அவங்களும் தொழில் செய்ய வருவாங்க.

இதுல எதுவுமே சொல்லாம இருந்தா என்ன செய்ய முடியும்.

நாலுக்கு நாள் விவசாய நிலங்களின் எண்ணிக்கை குறைஞ்சிட்டே வருது.

எல்லாம் ரியல் எஸ்டேட்னு போயிட்டு என்னத்த பண்ணுவாங்கன்னு தெரியல .

என்னதான் இந்தியா வல்லரசாகனும் நினைச்சி அதிவேகமா நாம் பயனித்தாலும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அடுத்தவன நம்பி பசியோடு இருக்கும் நிலை வேண்டாமே?


அதனால ஓட்டு போடறப்ப நிறைய யோசிங்க. அட யாருமே எதுவுமே செயயலயா?

கவலையே இல்ல. எனக்கு ஓட்டுபோட விருப்பமில்லைன்னு எழுதிகொடுத்திட்டு வந்துடுங்க. ஏன்னா நீங்க போடத ஓட்டை கட்சிகாரங்க கள்ள ஓட்டா குத்திடுவாங்க. அது நல்லதில்லை. எனவே வாங்க வாங்க!!

ஓட்டுப்போடறதுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே மாதிரி உங்களுக்கு ஒட்டு போடறதுக்கு உரிமையில்லைன்னு சொல்லி எடுதிக்கொடுப்பதற்கும்உரிமை இருக்கு


கொஞ்சம் சிந்தியுங்க மக்கா.. அது நாட்டுக்கும் நமக்கும் ரொம்ப நல்லது.


அட இதுல இன்னொரு சந்தோஷமான விஷயம்.


இம் முறை சில இளைஞர்கள் தேர்தலில் களமிறங்கறாங்க. அது வரவேற்க தக்க விஷயம் . அடுத்த முறை இன்னமும் எதிர்பார்க்கலாம்.

நன்றி!

இனியொரு விதி செய்வோம்!!

தேர்தல் வருது.... ஓட்டு போடறதுக்கு முன்னாடி இந்த பாட்ட முழுசா கேளுங்க http://www.youtube.com/watch?v=McQedVwZN4Y

No comments: